Wednesday, December 06, 2006

சிந்திக்க மறுக்கும் சிந்தனாவியாதிகள்

கி.அ.அ. (கிராமத்து அரட்டை அரசியல்) அனானி ஒரு மேட்டரை மெயிலில் அனுப்பி, இவ்வாறு எழுதியிருந்தார்:
**************************
எ.அ.பாலா,
கொஞ்ச நாளா ஊர்ல இல்லை. வலைப்பதிவு பக்கமும் வர முடியவில்லை. இன்று வாசித்த ஒரு பதிவுக்கு பின்னூட்டம் இட (அட ...அனானியாத் தான்) எண்ணி எழுதியது நீண்டு விட்டதால், தங்களுக்கு அனுப்புகிறேன். பதிவாக இடுவீர்கள் என்று நம்புகிறேன். யோசித்துப் பார்த்தால் குறிப்பிட்ட அப்பதிவில் பின்னூட்டுவதை விட (ஜால்ரா காதைப் பிளப்பதால்) தாங்கள் பதிவாக பிரசுரித்தால் பெட்டர் என நினைக்கிறேன். அப்புறம் உங்கள் இஷ்டம்.
கி.அ.அ.அனானி

பி.கு: எந்தப் பதிவை குறிப்பிடுகிறேன் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு டிசம்பர் மாதக் கச்சேரிகளுக்கு பாலா இலவச டிக்கெட் வழங்குவார் ;-)

***************************
'இதில் என்ன இருக்கிறது' என்பதாலும், "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற பரந்த நோக்கிலும் கி.அ.அ.அனானியின் வேண்டுகோளை நிறைவேற்றுகிறேன் :)
இப்பதிவுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு கி.அ.அ.அ. அவர்களையே பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் !!! கி.அ.அ.அ மேட்டர் பதிவாக கீழே !
எ.அ.பாலா
**********************

"எங்கள் வீட்டில் தேங்காய் குழம்பு" இப்படி சொன்னவளிடம் எதிர் வீட்டுக்காரி " எங்கள் வீட்டில்
யாருக்குமே தேங்காய் ஆகாது..நாங்கள் தேங்காயே வாங்குவதில்லை " சொல்லும் போதே மனதுக்குள்
தேங்காயை துறுவு துறுவென்று துறுவி தேங்காய் வாங்க வக்கில்லாத அகங்காரத்தை சேர்த்து மனதுக்குள் போட்டு மென்று அரைத்த படி கடவாயில் தேங்காய் நினைப்பின் எச்சில் ஊற சொல்வாளாம். அடுத்த
வீட்டுக்காரியின் பொறாமை பற்றி இந்த மாதிரியாக வர்ணித்திருப்பார் ஒரு எழுத்தாளர்...தமிழ்
கதையில்தான்...இப்படி இருக்கிறது ஒரு வலைப்பதிவரின் ஆதங்கம்....

விஷயம் ஒன்றுமில்லை....டிசம்பர் கச்சேரிகளில் தமிழில் பாடுவதில்லையாம்...பாடும் ஒரு
குறிப்பிட்ட சாதி பொண்கள்...!!!!????

இந்த மாதிரி அதிகம் (வெட்டி) உணர்ச்சி வசப்படுபவர்களுக்கு சில யோசனைகள்

முதலாவதாக இந்த சாதிக்காரர்கள் மட்டும் ஏன் பாட வேண்டும்...விருப்பமுள்ளவர் அனைவரும் தமிழில் பாடி தமிழ் வளர்க்கலாம்...

இரண்டாவதாக இப்படி தமிழல்லாத குறிப்பிட்ட மொழியில் பாடி ( தமிழ் வளர்க்காத ) கச்சேரிகளை புறக்கணிக்கலாம்

மூன்றாவதாக தமிழில் பாடுபவர்களை ஊக்குவிக்க ஏதாவது உபயோகமாக செய்யலாம்..

நாங்காவதாக எனக்கு பறை, தமுக்கு அடிக்கத் தெரியும் என்று பீற்றுவதை விட்டு விட்டு அரங்கேற்றம் செய்து தமிழ் பாரம்பரிய கலைகளை மக்களிடம் எடுத்து செல்லலாம்.

ஐந்தாவதாக தமிழில் மட்டுமே பாடி கச்சேரி செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசை மானியம் வழங்கச் சொல்லி பரிந்துரையாவது செய்யலாம்.

இதெல்லாம் விட்டுவிட்டு எந்த ஒரு குறிப்பிட்ட சாதியினரையும் இழிவாக பேசி கூப்பாடு போடுவதாலெல்லாம் வலையுலகில் அரிப்பெடுத்து அலையும் சிலருக்கு சுகமாய் சொரிந்து விட உதவலாம்...ஆனால் இதனாலெல்லாம் தமிழ் வளர்ந்து விடாது...அரிப்பை சொரியும் போது சுகமாய் இருக்கும்...ஆனால் சொரிந்து சொரிந்து புண்ணாகுமே தவிர சொரிவது அரிப்புக்கு மருந்தாகுமா????

இவர்களே சொல்வது போல பட்டுப் புடவை சரசரக்க , போண்டா தின்பதற்காகவே ஒரு சில மாமிகள் மட்டுமே போய் புரியாமல் கேட்கும் சங்கீதத்தின் மேல் இவர்களுக்கு ஏன் இத்தனை ஆற்றாமை???அங்கலாய்ப்பு???? இப்படி சிலர் பாடுவதும் கேட்பதும் எந்தவிதத்தில் தமிழ் வளராமல் தடுத்துவிட்டது....இத்தனைக்கும் பாடுபவர்கள்... அனைவரும் வாரீர்...ஆதரவு தாரீர் என்றெல்லாம் இவர்களைப் போய் கேட்டதாகக் கூட தெரியவில்லை...அப்படிக் கேட்டாலும் தமிழில் பாடாதவர்களுக்கு ஆதரவில்லை என தெள்ளத்தெளிவாக சொல்லி விடலாம்.இதைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதும் புத்தகங்களையும் புறக்கணித்து விடுங்கள்..அவர்களும் இதனால் சந்தாதாரர்கள் குறைந்தால் அதன் மூலம் பாடம் கற்று இந்த உதவாக்கரை கச்சேரிகளைப் பற்றி எழுதுவதை விட்டு விடுவார்கள்.

எனவே ஜென்டில்மேன்...மனதுக்குள் தேங்காய் தின்று கொண்டு..... தேங்காய் தின்னும் அடுத்தவனை பார்த்து கறுவுவதை விட்டு விட்டு..உண்மையில் தேங்காய் வாங்கித் தின்ன முயலுங்கள்....இதாவது தேவலை...இவர்களுக்கு பின்னூட்ட ஜால்ரா தட்டுபவர்களின் நிலைமை இன்னும் பரிதாபம்....தேங்காய் என்றால் என்ன என்று கூட தெரியாது...ஆனால் இவர்களுக்கு தேங்காய் பிடிக்காது.....கொடுமையடா சாமி????????

இந்த வலைப்பதிவரின் நேர்மைக்கும் மேதமைக்கும் சில உதாரணங்கள்...பின்னூட்டத்தில் சங்கீதம் பற்றி தமிழ் பற்றி உண்மை அக்கறையுடன் பேசிய எவருக்கும் இவர் பதில் சொல்லியிருக்க மாட்டார்....சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்வது (தமிழ்) பழமொழி....அதைத்தவிர மற்ற அனைவருக்கும் வளைத்து வளைத்து பதில் பின்னூட்டம் கொடுத்திருப்பார்....

தலைப்பை மாற்றி வைத்தெல்லாம் நேர்மை பறை சாற்ற முடியாது....குறிப்பிட்ட ஜாதியத்தை திட்டுகிறேன் என்று குறிப்பிட்ட ஜாதியை திட்டும் மொள்ளமாரித்தனத்தை இதனாலெல்லாம் மூடி மறைக்கமுடியாது....Keep the title of your post as you wish...and blame and curse as much as you can.....This is a Free world, after all.

கி.அ.அ.அனானி
*************************

*** 267 ***

23 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test :)))

dondu(#11168674346665545885) said...

"பி.கு: எந்தப் பதிவை குறிப்பிடுகிறேன் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு டிசம்பர் மாதக் கச்சேரிகளுக்கு பாலா இலவச டிக்கெட் வழங்குவார் ;-)"

நந்தா படத்தில் ஜ்ட்ஜிடம் வாய்க் கொழுப்பாகப் பேசுவார் கருணாஸ். ஜட்ஜ் அவருக்கு கோர்ட்டை அவமதித்த குற்றத்துக்கு அபராதம் விதிக்க, கருணாஸ் கூலாக, "இந்த அபராதத்தை எனது வக்கீல் கட்டுவார்" எனக் கூறிவிட, வக்கீல் காமெராவைப் பார்த்து பேய் முழி முழிப்பார். ஏனோ தெரியவில்லை, கி.அ.அ.அனானியின் இந்த அறிவிப்பு இந்த சீனை எனக்கு ஞாபகப்படுத்துகிறது. அதிலும் வக்கீலாக நடிக்கும் பக்திசரண் எனது நண்பர்.

என்ன பதிவா? நானே அதில் பின்னூட்டமிட்டுள்ளேனே. http://kuttapusky.blogspot.com/2006/11/1.html

எனக்கு டிக்கட் கிடைக்குமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

well said! Bala, this is what i like in you. Thottal sudum ;)

கால்கரி சிவா said...

//பி.கு: எந்தப் பதிவை குறிப்பிடுகிறேன் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு டிசம்பர் மாதக் கச்சேரிகளுக்கு பாலா இலவச டிக்கெட் வழங்குவார் ;-)//


ஒன்லி கச்சேரி டிக்கட்டா இல்லை ஊரிலிருந்து வர போக கன்வேயன்ஸ் அலவன்ஸ், டிக்கட்டுகளும் உண்டா

ஜோக்ஸ் அபார்ட்

இந்த சிந்தனா வியாதிகளின் கண்ணில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் செய்வது மட்டும் உறுத்தும். அது அவர்களின் வியாதிதான். அதை குணபடுத்த முடியாது

enRenRum-anbudan.BALA said...

டோண்டு ராகவன்,
நன்றி. கச்சேரிக்கு போகும்பொது தங்களையும் கூட்டிச் செல்கிறேன் :)))

ஜெய. சந்திரசேகரன்,
//well said! Bala, this is what i like in you. Thottal sudum ;)
//
சுட வேண்டாம், உறைத்தால் போதும் !!

கால்கரி சிவா,
//ஒன்லி கச்சேரி டிக்கட்டா இல்லை ஊரிலிருந்து வர போக கன்வேயன்ஸ் அலவன்ஸ், டிக்கட்டுகளும் உண்டா
//
இதெல்லாம் ரொம்பவே டூ மச் :)

ஒரு முறை கனடா வந்திருக்கிறேன், 2 வருடங்களுக்கு முன், ஆட்டவா (Nortel Networks, Ottawa)வுக்கு.
நன்றி

எ.அ.பாலா

said...

apdi pOdu aruvALai :)))))))

nallA vassIngka avangkaLukku Appu ;)))

said...

பாலா,
கல்கி நிறைய முறை சொன்னதை தான் இந்த கட்டுரையில் சொல்லியிருக்கிறீர்கள். டாபிக் கொஞ்சம் ஓல்ட் :-(
தேசிகன்

enRenRum-anbudan.BALA said...

Anonymous blogger comment received by mail published below
**************************
அருமையான பதிவு. கேள்விகள் ஒவ்வொன்றும் தெளிவாக வந்து விழுந்திருக்கிறது. சொறிதல் - புண், தேங்காய் போன்ற உவமானங்களும் பொருந்துகின்றன. யார் சார் இந்த கி அ அ? நீங்களேதானா?
**************************

My response:
Thanks ! I am not கி அ அ ! If I want to write anonymously, I can always start a separate blog for that. Why should I do it in my blog ???? If I have an opinion, I will express that with my identity.

Moreover, I do not want to take credit for கி அ அ's writing :)))

said...

உங்களுடைய கேள்விகள் நியாயமானது. இதை நண்பர் ஒருவர் ஏற்கனவே தன்ன்னுடைய பதிவில் தெளிவுபடுத்தியுள்ளார்.

இங்கே கொஞ்சம் க்ளிக் செய்து பார்க்கவும்

said...

"உங்களுடைய கேள்விகள் நியாயமானது. இதை நண்பர் ஒருவர் ஏற்கனவே தன்ன்னுடைய பதிவில் தெளிவுபடுத்தியுள்ளார்.

இங்கே கொஞ்சம் க்ளிக் செய்து பார்க்கவும் ""

சுட்டி கொடுத்தமைக்கு நன்றி .

சொல்லப் போனால் இன்னும் அழகாக "மொழி வளர்ப்புக்கு" ஆக்கபூர்வமான யோசனைகளை "கருத்து கந்தசாமி" பதிவில் கட்டுரையாளர் திரு.ஜெயகுமார் மணி வைத்துள்ளார் . பாராட்டுக்கள்.
கி அ அ அனானி

ஓகை said...

பெண்பாலரை மட்டும் தலைப்பில் வைத்திருக்கிறார் பாருங்கள். ஏதோ அந்த ஜாதியில் பெண்கள் மட்டுமே பாடுவதைப் போல. சிமுலேஷன் அருமையாக ஆக்கப் பூர்வமாக இதைப் பற்றி எழுதியிருக்கிறார். இங்கே சென்று பாருங்கள்.

said...

SOLLIYA KARUTHUKAL YA UM UNMAI THAN .AANAL ATHIL THONIKUM NAKKAL,ANTHA KATURAIYUM ITHUM ORE ALIVARISAIYE.YELLORUME ORE KUTAIYIL OORIYA MATAIKAL.

said...

நல்ல கருத்து...விமுலேஷன் கருத்துக்களும் இதுவும் அதிகமாக ஒத்துப்போகிறது.

பார்பனர்களை தாக்கமட்டுமே பதிவெழுதுபவர்களுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன?, அவர்களுக்கு பரபரப்பாக ஒரு பதிவிட வேண்டும் என்பது மட்டுமே எண்ணம்...விட்டுத்தள்ளுங்க....
பறையும், தப்பும் அடிக்கத்தெரிந்தவர்கள் அதனை எப்படி சங்கீதத்தில் உபயோகிப்பது, இருக்கிற பிரபந்தங்களையும், மற்றபல தமிழ் பாடல்களையும் எப்படி ராக-தாள கட்டுக்களுக்குள் கொண்டுவருவதென்றும் யோசித்து அதனை செயல்படுத்தினால் மற்றவர்கள் பாடுவார்கள்...........நாத்திகம் பேசியே பொழுது போக்கும் இவர்கள் இதெல்லாம் எங்க செய்யப்போகிறார்கள்...

said...

உண்மைதான் ஓகை....

நல்ல ஆக்கபூர்வமான பதிவு மற்றும் யோசனைகள்....அற்புதமான சிந்தனை...
சிமுலேஷனுக்கு வாழ்த்துக்கள் பல.

கி அ அ அனானி

said...

பாகம் 2 வந்து விட்டதே பதில் சொல்வீர்களா என்று கேட்காதீர்கள் ப்ளீஸ்..முதலில் எழுதப்பட்ட பதிவு காழ்ப்புணர்ச்சியால் அவதூறாக எழுதப்பட்டது...அது தவறு என சுட்டினேன்....இப்போது தொடர்வது... தான் சொன்னது சரிதான் என்று சாதிக்க பிதற்றுவது ...இதற்கு பதில் தேவையில்லை...சில நேரங்களில் சில மனிதர்கள் :))

கி அ அ அனானி

துளசி கோபால் said...

கச்சேரிகளுக்கு ஒரு டிக்கெட்டைத் தனியாக எடுத்து வைக்கவும்:-)

'சீஸன்' டிக்கெட்டுதானே?

enRenRum-anbudan.BALA said...

//கச்சேரிகளுக்கு ஒரு டிக்கெட்டைத் தனியாக எடுத்து வைக்கவும்:-)

'சீஸன்' டிக்கெட்டுதானே?
//
உங்களுக்கு இல்லாததா, டீச்சர் அக்கா :))) வாங்க, போண்டாவும் சாப்பிடலாம், கச்சேரி இன்டெர்வல்ல !

Krishna (#24094743) said...

கிஅ அனானி மிகநல்ல கேள்விகளைக் கேட்டுள்ளார். பதிலளிக்க முடியாது.

எஆ பாலா: ஏன் உங்கள் ப்ளாக் url-ல் ஒரு underscore வைத்திருக்கிறீர்கள். பெரும்பாலான நெட்வொர்க்குகள் இத்தகைய முகவரிகளை அனுமதிப்பதில்லை, தெரியுமா?

enRenRum-anbudan.BALA said...

//கிஅ அனானி மிகநல்ல கேள்விகளைக் கேட்டுள்ளார். பதிலளிக்க முடியாது.
//
I think you are RIGHT :) Thanks !

enRenRum-anbudan.BALA said...

A small advertisement:

My blog counter has touched the magic figure of 50000 :)))

Hariharan # 03985177737685368452 said...

எஅபாலா,

தன்னையும் தனது கொள்கையையும் மிகவும் முயன்று சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்(ல்)வது என்பது இதுதான்! :-)))

இவர்கள் மனவீடு ஆமை புகுந்ததாக இருப்பதால்தான் இப்படி சிந்திக்கிறார்கள். இயலாமை, ஆற்றாமை, பொறாமை என்றிருப்பதிலிருந்து ஆற்றலை, இணைந்து இசைப்பயணம் செய்கின்ற திறனை வளர்த்துக்கொண்டால் ஏன் இந்த ஆற்றாமை!

இந்தப் பகுத்தறிவு வியாதிகளுக்கு வேணும் போது பாப்பான் தமிழனாக இருந்து கொண்டு தமிழ் இசை பாடவில்லை, அப்புறமா வந்தேறி நீ தமிழின துரோகின்னு கூட்டம் கூடி கும்மி அடிப்பது!

பகுத்தறிவு அரசியல் திரா"விட"ப் பெத்தடினை வலிந்து வலிந்து போட்டுக்கொண்டு அதன் மோசமான போதையில் தவிப்பவர்கள் கேடான பெத்தடினை நிறுத்தினால் நிதானம் வரும்.. நிதானம் வந்தால் சிந்திக்கலாம்.. சிந்தித்தால் ஆக்கமாக ஆற்றலுடன் செயல்பட்டுச் சாதிக்கலாம்!

கிராமத்து அனானிக்குக் கூட தெரிஞ்ச பொது அறிவு விஷயம் கணிணி,கல்வி கற்ற இளையதலைமுறை கல்வியால் மட்டுமே பகுத்தறிவு வேலை செய்யாது என்று இன்னொருமுறை நிரூபித்திருக்கிறது!

enRenRum-anbudan.BALA said...

Hariharan,

நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி :)

//இந்தப் பகுத்தறிவு வியாதிகளுக்கு வேணும் போது பாப்பான் தமிழனாக இருந்து கொண்டு தமிழ் இசை பாடவில்லை, அப்புறமா வந்தேறி நீ தமிழின துரோகின்னு கூட்டம் கூடி கும்மி அடிப்பது!
//

"அவர்களுக்கு" எப்படி வசதியோ, அப்படிப் பேசுவது தான் அவர்கள் ஸ்டைல் ;-)

//கிராமத்து அனானிக்குக் கூட தெரிஞ்ச பொது அறிவு விஷயம் கணிணி,கல்வி கற்ற இளையதலைமுறை கல்வியால் மட்டுமே பகுத்தறிவு வேலை செய்யாது என்று இன்னொருமுறை நிரூபித்திருக்கிறது!
//
அவரது பெயர் தான் கிராமத்து அனானி, நகரத்தில் இருப்பதாகத் தான் தோன்றுகிரது !

said...

My blog counter has touched the magic figure of 50000 :)))

வாழ்த்துக்கள்.

முரளி மனோஹர்

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails